Home
Mobile

இந்த மே மாசம் ரொம்ப நல்ல மாசம்.. 12 புது போன்கள் அறிமுகம்.. OnePlus முதல் HMD வரை.. எந்தெந்த மாடல்கள்?

இந்த 2026 மே மாதம் (May 2026), ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பரபரப்பான ஒரு மாதமாக இருக்க போகிறது. விவோ தொடங்கி நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி வரையிலாக, இந்த மாதத்தில் பல நிறுவனங்கள், பல வகையான புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளன. என்னென்ன போன்கள், எப்போது அறிமுகம்? இதோ லிஸ்ட்:

விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ: விவோ நிறுவனம் மே 6 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு, விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மே மாசம் ரொம்ப நல்ல மாசம்.. 12 புது போன்கள் அறிமுகம்!

இதில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது, அதற்கான காரணம் - இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.82-இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப், 16GB வரை ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் மற்றும் சுருக்கமாக விவரிக்க முடியாத ஒரு கேமரா செட்டப் ஆகிய அம்சங்கள் தான்.

இதன் ப்ரைமரி கேமரா 200MP சோனி LYT-901 சென்சார் ஆகும். டெலிஃபோட்டோ கேமராவும் 200MP ஆகவும் - இது 10x ஆப்டிகல் ஜூம் கொண்ட சாம்சங் HPO சென்சார் ஆகும். மேலும், 50MP சோனி LYT-818 அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. இந்த மூன்று கேமராக்களும் Zeiss தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இதில் விவோவின் ஹொரைசன் லெவல் ஸ்டெபிலைசேஷன் (Horizon Level Stabilisation) அம்சம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது 6,600mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதி, IP68 மற்றும் IP69 ரேட்டிங் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். இதன் விலை ரூ.1,60,000 முதல் ரூ.1,70,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ்300 எப்இ மாடல் ஆனது ரூ.65,000 முதல் ரூ.75,000 குள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் நோர்ட் சிஇ 6 லைட்: ஒன்பிளஸ் நிறுவனம் இந்த இரண்டையும் மே 7 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்கிறது. நார்ட் சிஇ 6 மாடல் மே 8 முதலும், லைட் மாடல் மே 12 முதலும் விற்பனைக்கு வருகின்றன. இவை இரண்டும் அமேசான், ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மற்றும் ஃபைண்ட் எக்ஸ்9எஸ்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மே 2026 இல் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஃபைண்ட் X9 அல்ட்ரா, ஒப்போவின் ஹாசல்பிளாட் மாஸ்டர் கேமரா சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது அதன் சொந்த லூமோ இமேஜ் இன்ஜினில் இயங்குகிறது. இதில் உள்ள முக்கிய கேமரா அம்சம் 50MP 10x ஆப்டிகல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும்.

எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G): இதுவும் மே 2026 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு வெளியான எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,999 க்கு வாங்க கிடைத்தது. இது அதே பட்ஜெட் பிரிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.15,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஷாவ்மீ 17டி (Xiaomi 17T): இது 2026 மே மாதத்தில் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம். இது 6.59-இன்ச் 1.5K பிளாட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப், 67W சார்ஜிங்குடன் கூடிய 6,500mAh பேட்டரி மற்றும் லைக்கா பிராண்டட் டிரிபிள் கேமரா அமைப்பு ஆகிய முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். விலை தோராயமாக ரூ.74,999 முதல் ரூ.84,999 வரை செல்லலாம்.

2026 மே மாதத்தில் எதிர்பார்க்கப்படும் மற்ற போன்கள்:
- ஐக்யூ இஸட்11 லைட் (iQOO Z11 Lite), இது சுமார் ரூ.11,499 க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
- ரியல்மி பி4ஆர் (Realme P4R) மற்றும் ஒரு புதிய நார்சோ சீரிஸ் போன்
- எச்எம்டி கிரெஸ்ட் 2 மற்றும் கிரெஸ்ட் 2 ப்ரோ
- இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ
- சாம்சங் கேலக்ஸி ஏ27

Best Mobiles in India

English summary
New Upcoming Smartphone Launching in May 2026 India From OnePlus Nord CE 6 to HMD Vibe 2 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X