என்னது வெறும் ரூ.11,000 தானா? பரபரப்பை கிளப்பும் பட்ஜெட் போன்!

|

ரூ.16,000 - ரூ.20,000 எடுத்து வைத்தால் தான் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க முடியும் என்கிற சூழ்நிலையில்.. ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? என்று நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்தும் ஒரு பட்ஜெட் போனை பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க உள்ளோம்!

Vivo மற்றும் iQOO கூட்டணியில்.. வேற லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

Vivo மற்றும் iQOO கூட்டணியில்.. வேற லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

என்னது விவோ மற்றும் ஐக்யூ-வா? என்று குழப்பம் அடைய வேண்டாம். நாம் இங்கே பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஆனால் இது ஒரு லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போனின் 'ரீபிராண்டட் வெர்ஷன்' ஆகும்.

இன்னும் எளிமையாக சொல்லவேண்டும், விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐக்யூ இசட்6 லைட் ஆனது கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

இங்கே சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஐக்யூ இசட்6 லைட் ஆனது விவோ டி1எக்ஸ் போனை விட குறைவான விலைக்கு அறிமுகமாகும் என்பது தான்!

முன்குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் எல்லாமே ஐக்யூ இசட்6 மற்றும் விவோ டி1எக்ஸ் மாடலுடையது ஆகும்; ஐக்யூ இசட்6 லைட்டின் புகைப்படங்கள் அல்ல.

iQOO Z6 Lite எப்போது அறிமுகம் ஆகும்?

iQOO Z6 Lite எப்போது அறிமுகம் ஆகும்?

91மொபைல்ஸ் வழியாக நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்தியாவில் iQOO Z6 Lite ஸ்மார்ட்போனின் வெளியீடு வருகிற செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம்.

அறிமுக தேதியில் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் கூட, அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் பற்றி எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால், விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் தான் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதே! ஆகையால் அதன் அம்சங்களை நாங்கள் நன்கு அறிவோம்.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

iQOO Z6 Lite என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

iQOO Z6 Lite என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ஐக்யூ Z6 லைட் ஆனது ஆனது Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் உடனாக 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். அதாவது இது ஒரு 4G போனாக இருக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, iQOO Z6 Lite ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.58-இன்ச் அளவிலான FullHD LCD பேனலை பேக் செய்யலாம்.

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்யுமா? அல்லது டூயல் கேமராக்களை பேக் செய்யுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ஆனால் இது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.

மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். ஆகமொத்தம் இது Z6 Lite ஆனது முன்னதாக அறிமுகமான Z6 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷன் ஆகவும் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

ஐக்யூ இசட்6 லைட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்?

ஐக்யூ இசட்6 லைட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்?

iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவாக இருக்கலாம். அதாவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையானது சுமார் ரூ.11,499 ஆக இருக்கும்.

அறிமுகம் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் போன்ற சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், இது ரூ.10,000 க்கு கூட வாங்க கிடைக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம், Vivo T1x ஸ்மார்ட்போன் ஆனது 2 வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் ரூ.11,999 க்கும் மற்றும் ரூ.14,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

மேலும் iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனை போலவே 2 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது Gravity Black மற்றும் Space Blue வண்ணங்களில் வாங்க கிடைக்கலாம்.

Photo Courtesy: iQOO, VIVO

Best Mobiles in India

English summary
New Upcoming Budget Phone iQOO Z6 Lite Launch Date Specifications Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X