பெரிய தப்பு பண்ணிடீங்களே: முக்கிய வசதி இல்லாமல் புதிய போனை ரூ.12,499 விலையில் அறிமுகம் செய்த TECNO.!
மிகவும் பிரபலமான டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் 32எம்பி செல்பி கேமரா, அருமையான சிப்செட், பெரிய டிஸ்பிளே எனப்பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் இப்போது டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய போன் 6.78-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் ARM Mali-G52 2EEMC2 GPU வசதியும் உள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் HiOS 12.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போன்.
குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம்+(8GB expendable RAM) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா+ ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவாக புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக இருக்கிறது, ஆனால் இந்த போனில் 5ஜி வசதியைக் கொடுக்காமல் பெரிய தவறு செய்துவிட்டது டெக்னோ. அதாவது இந்த போன் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்தியாவில் சந்தையில் 5ஜி போனுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த போனில் 5ஜி வசதி மட்டும் இல்லாதது தான் மிகப் பெரிய குறை.

அதேபோல் பேர்ல் ஒயிட், ஸ்டார்ரி பிளாக் மற்றும் Lunar Eclipse நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.12,499-விலையில் இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








