Home
Mobile

இந்த விலைக்கு இதுவே அதிகம்.. 210 மினி LED லைட்ஸ், 108MP கேம், 12GB ரேம், 6000mAh பேட்டரி.. என்ன மாடல்?

210 மினி எல்இடி லைட்டுகள் உடனான பேக் பேனல், 108எம்பி ரியர் கேமரா, 12ஜிபி வரையிலான ரேம், 6000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்வருகிற மார்ச் 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

என்ன மாடல்? விரைவில் இந்திய அறிமுகத்தை காணவுள்ளது - டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) ஸ்மார்ட்போன் தான். நினைவூட்டும் வண்ணம், இது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்வில் (Mobile World Congress 2024 Event) அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது இந்திய சந்தைக்கு வருகிறது.

புதிய Tecno போன்.. 210 மினி LED லைட்ஸ், 108MP கேம், 6000mAh பேட்டரி!

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (PWM Dimming) மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான டியுவி ரைன்லேண்ட் சான்றிதழையும் (TUV Rheinland Certificate) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹைஓஎஸ் 14 (HiOS 14) கொண்டு இயங்குகிறது.

மேலும் இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (6nm MediaTek Dimensity 6080 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் விர்ச்சுவல் ரேம் ஆதரவு (Virtual RAM Support) உடன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஐபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய Tecno போன்.. 210 மினி LED லைட்ஸ், 108MP கேம், 6000mAh பேட்டரி!

ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக (Heat Management) இந்த டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போனில் மொத்தம் 2,7342 மிமீ கூலிங் ஏரியா (Cooling Area), இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆப்ரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸ் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camer Setup) உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் (LED Flash) உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

புதிய Tecno போன்.. 210 மினி LED லைட்ஸ், 108MP கேம், 6000mAh பேட்டரி!

மேலும், டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் (Dolby Atmos Spacial Sound Support) வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போனான இதன் பேக் பேனலில் 210 எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பும் (Mini LED Liaghts Setup) உள்ளது.

இதன் மினிஎல்இடி லைட்ஸ் செட்டப்பை, உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள், ஸ்மார்ட்போனின் பவர் ஸ்டேட்டஸ், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் கேட்கும் ம்யூசிக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 70W சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

புதிய Tecno போன்.. 210 மினி LED லைட்ஸ், 108MP கேம், 6000mAh பேட்டரி!

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி , இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும், 50 நிமிடங்களில் 100 சதவிகிதத்திற்கும் பேட்டரியை நிரப்பும். மேலும் இந்த்ஸ் ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரத்திற்கும் மேலான கேமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 31 மணி நேரத்திற்கும் அதிகமான காலிங் நேரத்தை வழங்கும்.

என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் இது ரூ.15,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் எதிர்பார்ப்பது நல்லது. ஏனென்றால் கடந்த ஆண்டு வெளியான டெக்னோ போவா 5 ப்ரோ மாடலானது தற்போது ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ew Tecno Phone with LED Lights 108MP Camera 6000mAh Battery Tecno Pova 6 Pro India launch March 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X