Home
Mobile

இனி ஒன்பிளஸ் நோர்ட் எதுக்கு? 108MP அல்ட்ரா வைடு கேமராவுடன் முரட்டுத்தனமான TECNO 5ஜி போன் அறிமுகம்!

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று (7-7-2023) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் டைமன்சிட்டி சிட்பசெட், பெரிய டிஸ்பிளே, 108எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. பின்பு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

108MPஅல்ட்ரா வைடு கேமராவுடன் முரட்டுத்தனமான TECNO 5ஜி போன் அறிமுகம்!

டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் வசதிக்கு தகுந்தபடி சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

108MPஅல்ட்ரா வைடு கேமராவுடன் முரட்டுத்தனமான TECNO 5ஜி போன் அறிமுகம்!

டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்;. மேலும் HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா( RGBW sensor) + 108எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த போன்.

108MPஅல்ட்ரா வைடு கேமராவுடன் முரட்டுத்தனமான TECNO 5ஜி போன் அறிமுகம்!

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செரினிட்டி ப்ளூ மற்றும் டார்க் வெல்கின் நிறங்களில் டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அமேசான் பிரைம் டே Kickstarter விற்பனையில் இந்த போனை ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New TECNO Camon 20 Premier 5G phone has been launched in India:Check specifications, price and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X