அம்புட்டு பேர் கண்ணும் OnePlus-ன் குட்டி போன் மேல.. புது Short Key.. 6260mAh பேட்டரி.. எப்போது அறிமுகம்?
இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களின் முழு கவனமும் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை மீது தான் உள்ளது. இது (சீனாவில் அறிமுகமான) ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
அதாவது ஒன்பிளஸ் 13டி மாடலில் உள்ள அதே அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஆனால் பெயர் மட்டும் ஒன்பிளஸ் 13எஸ் என்று மாற்றப்படும். கடந்த மாதமே ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் சரியான வெளியீட்டு தேதியை பகிரவிவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்களை வெளிப்படுத்தும் புதிய டீஸர் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் புதிய வீடியோ டீஸர் ஆனது பிளாக் மற்றும் பிங்க் கலர் ஆப்ஷன்களை காட்டுகிறது. இந்த கலர்களின் மார்க்கெட்டிங் பெயர்கள் என்னவாக இருக்கும் என்கிற விவரங்களை இல்லை. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி மாடல் ஆனது கிளவுட் இங்க் பிளாக், மார்னிங் மிஸ்ட் கிரே மற்றும் பவுடர் பிங்க் ஆகிய 3 கலர்களில் அறிமுகமானது.
ஒன்பிளஸ்-ன் இந்த புதிய டீஸர், ஒன்பில்ஸ் 13எஸ் ஸ்மார்ட்போநின் காம்பாக்ட் டிசைனையும் காட்டுகிறது. முன்புறத்தில் ஒரு ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பையும், பின்புறத்தில் ஒரு தனித்துவமான டூயல் ரியர் கேமரா யூனிட்டையும் கொண்டுள்ளது. மேலும் டிஸ்பிளேவை சுற்றி மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் இந்தியா மற்றும் அமேசான் இந்தியா ஆகிய இரண்டுமே தங்கள் வலைத்தளங்களில், ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கான பிரத்யேக லேண்டிங் பேஜ்களை உருவாக்கியுள்ளன. அவைகளின் வழியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.32-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருப்பதையும், இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயங்குவதும், இது எச்சரிக்கை ஸ்லைடரை மாற்றும் ஒரு ஷார்ட் கீயை கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.


Click it and Unblock the Notifications








