நோக்கியா போன்களுக்கு புதிய வெர்ஷன் ஸ்வைப் டைப்பிங் சாப்ட்வேர்

By Super
|
நோக்கியா போன்களுக்கு புதிய வெர்ஷன் ஸ்வைப் டைப்பிங் சாப்ட்வேர்
எதெல்லாம் வேலையை எளிதாக்குகிறதோ, அந்த வசதிகளையெல்லாம் கொடுக்க சிறிதும் தயங்குவதே இல்லை, இன்று வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகம். அந்த வரிசையில் சற்றும் பின் தங்காமல் மொபைல் உலகத்தில் நடைபோடுகிறது நோக்கியா நிறுவனம்.

புதிய ஸ்வைப் வெர்ஷன் சாப்ட்வேரை நோக்கியா தனது மொபைல்களில் பயன்படுத்த உள்ளது. நோக்கியாவின் பல மொபைல்களில் சிம்பையான் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட அனைத்து நோக்கியா மொபைல்போன்களிலும் ஸ்வைப் 2.0 சாப்ட்வேரை அப்லோடு செய்து கொள்ள முடியும்.

மேலும், டச் ஸ்கிரீன் கொண்ட போன்களில் மட்டுமே இந்த சாப்ட்வேரை அப்லோடு செய்ய முடியும். இந்த வசதியினால் எதையும் வேகமாக டைப் செய்ய முடியும். இதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. டெக்ஸ்ட் பிரடிக்ஷன், ஆட்டோமேட்டிக் டெக்ஸ்ட் இன்புட் போன்ற வசதிகளையும் பெற முடிகிறது.

நோக்கியாவின் பீட்டா லேப்ஸ் இணையதளத்தில் இருந்து இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொள்ள முடியும்.

இது போன்று இன்னும் 30 வசதிகளை டவுண்லோடு செய்ய முடியும். என்-8, சி-7, இ-7 மற்றும் சி6-01 போன்ற நோக்கியா மொபைல்கள் சிம்பையன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டவை.

புதிய ஸ்வைப் 2.0 வெர்ஷனில் டைப் செய்யவதற்கு வசதியாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோக்கியா ஓவிஐ ஸ்டோரிலிருந்து 30 மொழிகளில் இந்த சாப்ட்வேரை அப்லோடு செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த டிவைஸில் போர்ட்ரெய்ட் மற்றும் ஸ்லிப் ஸ்கிரீன் சப்போர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த ஸ்பைப் 2.0 வசதி சிம்பையன் எஸ்-60 5 எடிஷனுடன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனுடைய அக்சஸோரியல் அப்ளிக்கேஷன் இன்னும் சில நவீன தொழில் நுட்பங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியினால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X