Home
Mobile

இக்கட சூடு கண்ணா! புது கெட்டப்பில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் அறிமுகமான 6000mAh பேட்டரி Redmi போன்!

ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் பட்டையை கிளப்பும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ரெட்மி இந்தியாவிற்கு (Redmi India) ஒரு முக்கிய இடமுண்டு. அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தின் கீழ் ரெட்மி நிறுவனம் ஒரு கலர்ஃபுல் ஆன வேலையை பார்த்துள்ளது!

நேற்று வரையிலாக 3 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே வாங்க கிடைத்த பிரபலமான பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் இப்போது சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) என்கிற புதிய கலர் ஆப்ஷனின் கீழும் விற்பனை செய்யப்படுகிறது. நாம் இங்கே பேசுவது ரெட்மி 10 (Redmi 10) ஸ்மார்ட்போனை பற்றித்தான்!

புது கெட்டப்பில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் புதிய Redmi போன் அறிமுகம்!

கடந்த ஆண்டு அறிமுகமாகி, ரூ.10000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த ரெட்மி போன்களில் (Best Redmi Phone Under Rs.10000) ஒன்றாக திகழும் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் "கெட்டப்" மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ஆனால் "செட்டப்" எதுவும் மாற்றப்படவில்லை. அதாவது ரெட்மி 10-ன் புதிய சன்ரைஸ் ஆரஞ்ச் கலர் வேரியண்ட்டின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது!

ரெட்மி 10 சன்ரைஸ் கோல்ட் கலர் ஆப்ஷனின் விலை மற்றும் விற்பனை

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் சன்ரைஸ் ஆரஞ்சு கலர் ஆப்ஷனின் இந்திய விலை ரூ.9,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும். இந்த புதிய கலர் ஆப்ஷன் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 10 சன்ரைஸ் ஆரஞ்சு அம்சங்கள்

முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி 10 சன்ரைஸ் ஆரஞ்சு கலர் வேரியண்ட்டின் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இது மற்ற மூன்று கலர் ஆப்ஷன்களை போலவே டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வருகிறது. மேலும் இது 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வரும் ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Octa-Core Qualcomm Snapdragon 680 SoC) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரெனோ 610 ஜிபியு மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (எஃப்/1.8 லென்ஸ்) மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் உள்ளது. இந்த கேமரா செட்டப்பில் எல்இடி ப்ளாஷ் (LED Flash) ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி (Connectivity) விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான ஒரு பெரிய 6,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. அளவீட்டில், இந்த ஸ்மார்ட்போன் 169.59x76.56x9.13மிமீ உள்ளது மற்றும் இதன் எடை 203 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Sunrise Orange Color Variant of Redmi 10 Smartphone Launched in india For Rs 9999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X