Home
Mobile

ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. 3 லேட்டஸ்ட் Realme போன்கள் மீது சூப்பர் தள்ளுபடி.. என்னென்ன மாடல்கள்?

புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ள அனைவரையும் ஈர்க்கும் வண்ணம், ரியல்மி (Realme) நிறுவனத்தின் 3 மாடல்கள் மீது, அடுத்த ஆறு நாட்களுக்கு நீடிக்கும் ஸ்பெஷல் ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்து. என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ரியல்மி நிறுவனமானது அதன் நார்சோ சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் ரியல்மி நார்சோ என் (Realme Narzo N55), ரியல்மி நார்சோ 60 (Realme Narzo 60) மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro) மாடல்கள் மீது சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

3 லேட்டஸ்ட் Realme போன்கள் மீது சூப்பர் தள்ளுபடி!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்பெஷல் ஆஃபர் ஜூலை 20 ஆம் தேதி அதிகாலை 12:00 மணிக்கு தொடங்கி வருகிற ஜூலை 26 ஆம் தேதி வரை நடக்கும். மேலும் இந்த 3 ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளும் அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon.in) மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Realme.com) ஆகிய இரண்டின் வழியாகவும் அணுக கிடைக்கும்.

அமேசான்.இன் மற்றும் ரியல்மி.காம் வழியாக ரியல்மி நார்சோ 60 ப்ரோவின் எந்தவொரு ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினாலும் ரூ.1000 என்கிற பேங்க் ஆஃபர் மற்றும் 6 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கும்.

அதேபோல அமேசான்.இன் மற்றும் ரியல்மி.காம் வழியாக ரியல்மி நார்சோ 60 மாடலை வாங்கினால் உங்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும். கடைசியாக உள்ள ரியல்மி நார்சோ என்55 மாடலை பொறுத்தவரை, அதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரூ.750 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும்; அதுவே 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனை வாங்கினால் ரூ.500 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும்

நார்சோ 60 ப்ரோ, நார்சோ 60, நார்சோ என்55 விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: ரியல்மி நார்சோ 60 ப்ரோ ஆனது 12GB வரையிலான டைனமிக் ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இந்த விலைப்பிரிவில் இவ்வளவு ஸ்டோரேஜை வழங்கும் ஒரே ஸ்மார்ட்போன் இதுதான்.

மார்ஷியன் ஹொரைசன் (Martian Horizon) டிஸைன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கர்வ்டு டிஸ்பிளே, 100எம்பொ ஓஐஎஸ் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள நார்சோ 60 ப்ரோவானது மார்ஸ் ஆரஞ்சு (Mars Orange ) மற்றும் காஸ்மிக் பிளாக் (Cosmic Black) என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.

இது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.23,999 ஆகும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.26,999 ஆகும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜின் விலை ரூ.29,999 ஆகும்.

அடுத்ததாக உள்ள ரியல்மி நார்சோ 60 ஸ்மார்ட்போன் ஆனது, நேர்த்தியான பிரீமியம் வேகன் லெதர் (Premium Vegan Leather) மற்றும் மார்டியன் ஹொரைசன் வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 64எம்பி மெயின் கேமராவுடன் வருகிறது.

இது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.

கடைசியாக உள்ள ரியல்மி நார்சோ என்55 ஸ்மார்ட்போனானது 12ஜிபி வரையிலான டைனமிக் ரேம் மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதுவும் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: 4ஜிபி ரேம் + 64ஜிபி மாடலின் விலை ரூ.10,999; 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.12,999.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Special Offer Announced on 3 Realme Narzo Smartphones From July 20 to July 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X