சீனாக்காரன் வேலைய பார்த்துட்டான்.. இந்தியாவிற்கு வரும் முன் OnePlus 13 போனில் முக்கிய மாற்றம்!
கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டு தேதி (Global Launch Date) இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் இது அடுத்த மாதம் (டிசம்பர் 2024) இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம், புதிய சாப்ட்வேர் அப்டேட் (New Software Update) வழியாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்னமும் சொந்த நாட்டு சந்தையை (சீன சந்தையை) தாண்டாத ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் மேக்ரோ மோட் (Macro Mode) என்கிற ஒரு புதிய கேமரா அம்சம் (New camera feature) சேர்க்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ள மேக்ரோ மோட் ஆனது மிகச்சிறிய பொருட்கள் அல்லது விவரங்களை, மிகவும் நெருக்கமான முறையில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும். ஒன்பிளஸ் 13-க்கு வந்த சாப்ட்வேர் அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின், ஸ்மார்ட்போனின் டீபால்ட் கேமரா ஆப்பில் உள்ள இதழ் வடிவிலான ஐகான் மூலம் மேக்ரோ மோட்-ஐ அணுக முடியும்.
ஆனால் மேக்ரோ போட்டோக்களுக்காக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உள்ள எந்த லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ஹாசல்பிளாட்-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
அதில் 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆனது 60எப்பிஎஸ் வரையிலான 4கே வீடியோ மற்றும் 8கே வீடியோ ரெக்கார்டிங்களை ஆதரிக்கிறது. செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் எப்/2.4 அபெர்க்ஷர் மற்றும் 30எப்பிஎஸ் வரையிலான 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உடனான சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களின் பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டு தேதியை போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமும் ஒரு மர்மமாகவே உள்ளது. சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் 4499 யுவான்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,150 க்கு அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் 8ஜிபி ரேம் தான் பேஸிக் வேரியண்ட் ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அதிகபட்சமாக ஒன்பிளஸ் 13-ன் ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.79,999 வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








