சொல்லி அடிக்கும் புது iQOO போன்.. Snapdragon 8 Elite Gen 5 சிப், 16GB ரேம், 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!
நான் பொறந்ததுல இருந்தே ரெடி என்று என்கிற சினிமா வசனம் ஐக்யூ நிறுவனத்திற்கு சரியாக பொருந்தும். மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கென்றே தரமான ஸ்மார்ட்போன்களை இறக்குவதில் ஐக்யூ கில்லாடி. இதற்கு - ஒன்பிளஸ் 13 மாடலின் வியாபாரத்திற்கு வெடி வைத்த ஐக்யூ 13 மாடலை ஒரு நல்ல எடுத்துகாட்டாக கூறலாம்.
இந்தாண்டும் ஐக்யூ அதன் வேலையை காட்டிவிட்டது. சுவாரசியமாக ஒன்பிளஸ்-க்கு மட்டுமின்றி ரியல்மி-க்கும் சேர்த்து வெடி வைத்துள்ளது. ஐக்யூ-வின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 15 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனமானது, அதன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலானது - ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று அறிவித்த வேகத்தில், ஐக்யூவும் அதன் ஐக்யூ 15 (iQOO 15) மாடலில் அதே சிப்செட் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது
கூடுதலாக ஐக்யூ நிறுவனமானது, அக்டோபரில் நடக்கும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் சீன அறிமுகத்தை தொடர்ந்து விரைவில் இந்திய அறிமுகமும் நடக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக ஐக்யூ 15 மாடலின் முன்கூட்டிய அறிமுகமானது ஒன்பிளஸ் 15 மாடலின் இந்திய அறிமுகத்தை அவசரப்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஒருவேளை ஐக்யூ 15 ஆனது அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஒன்பிளஸ் 15 மாடலின் இந்திய அறிமுகமானது எதிர்பார்க்கப்படும் ஜனவரி 2026 க்கு முன்பாகவே நடக்கலாம். ஒட்டுமொத்தமாக ரியல்மி ஜிடி 8 ப்ரோ, ஒன்பிளஸ் 15 மற்றும் ஐக்யூ 15 ஆகிய 3 மாடல்களும் சேர்ந்து, மொபைல் மார்க்கெட்டில் ஒரு கலகத்தையே உருவாக்க உள்ளன.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 2கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85 இன்ச் சாம்சங் AMOLED திடிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடனான 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உட்பட மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்கள்
- 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 7,000mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6 (OriginOS 6)
- க்யூ3 கேமிங் சிப்
- புதிய எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார்
- சாட்டிலைட் கனெக்டிவிட்டி ஆதரவு
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது ரூ.70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் முன்னதாக வந்த ஐக்யூ 13 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக அறிமுகமான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது
அதனுடன் 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








