ஜூலை 29, 30, 31 ரெடியா இருங்க.. 3 நாட்களில் 6 புதிய போன்கள்.. Nothing, Realme, Oppo நிறுவனங்கள் போட்டி!
ஏற்கனவே பல புதிய அறிமுகங்களை (New Smartphones) கண்டுவிட்ட 2024 ஜூலை மாதமானது.. மீதமுள்ள நாட்களிலும் பல புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை காண உள்ளது. ஜூலை மாத இறுதியில், அதாவது 29, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மொத்தம் 6 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒப்போ (OPPO), ஷாவ்மீ (Xiaomi), ரியல்மி (Realme) மற்றும் நத்திங் (Nothing) ஆகிய நிறுவனங்கள் தத்தம் வெளியீடுகளை உறுதி செய்துள்ளன. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எந்த தேதியில் அறிமுகமாகும்? அவைகள் என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் ஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்: அது ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில் இது ரூ,25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். ஏனென்றால் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த மாடல் 7.68மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி (Ultra slim body) மற்றும் 186 கிராம் எடை உடையதாக இருக்கும்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,500mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கும்.

ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் ஷாவ்மீயின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்: அது ஷாவ்மீ 14 சிவி லிமிடெட் எடிஷன் (Xiaomi 14 Civi Limited Edition) ஸ்மார்ட்போன் ஆகும். இது கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஷாவ்மீ நிறுவனம இந்த லிமிடெட் எடிஷனை "பாண்டா டிசைன்" (Panda Design) என்று குறிப்பிடுகிறது.
மேலோட்டமான வடிவமைப்பை தவிர, இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பேஸிக் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களை தான் கொண்டிருக்கும். இந்தியாவில் இது ரூ.45,000 - ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மியின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்: அது ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த மாதம் ரூ.7,999 க்கு வேகன் லெதர் பேக் டிசைனுடன் அறிமுகமான ரியல்மி நார்சோ என்63 மாடலை வைத்து பார்க்கும் போது ரியல்மி நார்சோ என்61 ஆனது ரூ.8,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது பேக் பேனலில் 32 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தையும் கொண்டு வருகிறது.மேலும் டியுவி ரெயின்லேண்ட் (TUV Rheinland) உயர் நம்பகத்தன்மை சான்றிதழ் உடனான ஆர்மர்ஷெல் ப்ரொடெக்ஷனையும் (ArmorShell Protection) கொண்டுள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்: அது ரியல்மி 13 ப்ரோ சீரீஸ் 5ஜி (Realme 13 Pro Series 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) என 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.
எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ,34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இவ்விரு மாடல்களுமே டிவைஸ் மற்றும் கிளவுட்-பேஸ்டு ஏஐ இமேஜிங் ஆதரவு கொண்ட மூன்று அடுக்கு ஏஐ இமேஜிங் தொழில்நுட்பமான ஹைப்பர்இமேஜ் பிளஸ் கேமரா செட்டப்பை பேக் செய்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே TÜV ரைன்லேண்ட் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா சான்றிதழுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. ப்ரோ பிளஸ் மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி Sony LYT-701 சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் Sony LYT-600 பெரிஸ்கோப் ஷூட்டர் இடம்பெறலாம்.
ஜூலை 31 ஆம் தேதி அறிமுகமாகும் நத்திங் நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போன்: அது நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ஸ்மார்ட்போன் ஆகும். இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.29,999 க்கு தொடங்கலாம். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இதைவிட அதிக விலைக்கே பிளஸ் மாடல் அறிமுகமாகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆனது "அதிக செயலாக்க சக்தி" மற்றும் "ஹார்ட்வேர் டிசைன் மாற்றங்கள் தேவையில்லாத வேறு சில மேம்பாடுகளுடன்" வரும். அதாவது நத்திங் போன் 2ஏ-வில் உள்ள (மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ) சிப்செட்டை விட மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் பிளஸ் மாடலில் பேக் செய்யப்படலாம்.
மேலும் வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. டீஸர் புகைப்படத்தின் வழியாக, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை காண முடிகிறது. இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) காண முடிகிறது.


Click it and Unblock the Notifications








