நல்ல மாசம் பொறந்துருக்கு.. 7 புது போன்கள் அறிமுகம்.. ஜூலை அமோகம்.. Oppo, Nothing, Samsung, Vivo, Moto மாடல்!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாகத்திற்குள் (மீதமுள்ள 6 மாத காலத்திற்குள்) அடியெடுத்து வைத்துள்ள.. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு, இந்த ஜூலை (July) மாதமும் நல்ல மாதமாக இருக்க போகிறது. வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து 7 முக்கியமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எந்த மாடல், என்ன தேதியில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
1. ஒப்போ ரெனோ 16 (OPPO Reno 16) - இது ஜூலை 2 அன்று அறிமுகமாகவுள்ளது:
- 6.32-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மூன்று 50MP சென்சார்கள்
- 50MP அல்ட்ரா-வைட் செல்பீ கேமரா
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்
- 6,700mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங்
- AI Snap கீ வசதி

2. ஒப்போ ரெனோ 16சி (Oppo Reno 16C) - ஜூலை 2 அன்று அறிமுகமாகலாம்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 7300 எனெர்ஜி சிப்செட்
- 50MP ப்ரைமரி, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 6,500mAh பேட்டரி
3. நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) - ஜூலை 7 அன்று அறிமுகமாகிறது:
- டிரான்ஸ்பிரென்ட் டிசைன் (Transparent design)
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- 50MP டூபாய்ல கேமரா
- 5,000 முதல் 5,400mAh வரையிலான பேட்டரி
4. விவோ வி80 (Vivo V80) - ஜூலை 2026; அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 200MP ப்ரைமரி சென்சார், 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50MP செல்பீ கேமரா
- ஸ்னாப் டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்
- 90W பாஸ்ட் சார்ஜிங்
- 7,000mAh பேட்டரி
5. சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 8 (Samsung Galaxy Z Fold 8) - ஜூலை 22 அறிமுகம் ஆகலாம்:
- 7.6-இன்ச் இன்னர் டிஸ்பிளே
- 5.4-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே
- இரண்டு 50MP ரியர் கேமராக்கள் மற்றும் 10MP செல்பீ கேமரா
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 5,000mAh பேட்டரி
5. சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 8 (Samsung Galaxy Z Flip 8) - ஜூலை 22 அறிமுகம் ஆகலாம்:
- 6.9-இன்ச் இன்னர் டிஸ்பிளே
- 4.1-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே
- 50MP ப்ரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 10MP செல்பீ கேமரா
- எக்சினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
7. மோட்டோரோலா ரேஸர் 70 (Motorola Razr 70) - ஜூலை 2026 இல் அறிமுகம் ஆகலாம்:
- 6.9-இன்ச் pOLED இன்னர் டிஸ்பிளே
- 3.63-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 7450X சிப்செட்
- டூயல் 50MP ரியர் கேமராக்கள்
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 4,800mAh பேட்டரி


Click it and Unblock the Notifications