Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. மே 2024-ல்.. மொத்தம் 10 புது போன்கள் அறிமுகம்.. ஏப்ரலில் வந்த 9 போன்களும் காலி!

2024 ஏப்ரல் மாதமானது.. ஒன்பிளஸ் தொடங்கி ரியல்மி வரையிலாக.. பல நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கண்டது. மே மாதமும் கூட அதேபோல தான் இருக்கப்போகிறது. தற்போது வரையிலாக 10 நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை மே மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளன.

2024 மே மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (Upcoming Phones May 2024) அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
1. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4)
2. போக்கோ எப்6 (POCO F6)
3. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a)
4. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro)

நல்ல மாசம் பொறக்குது.. மே 2024-ல்.. மொத்தம் 10 புது போன்கள் அறிமுகம்!

5. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo)
6. சாம்சங் கேலக்ஸி எப்55 (Samsung Galaxy F55)
7. விவோ வி30இ (Vivo V30e)
8. சாம்சங் கேலக்ஸி எம்35 (Samsung Galaxy M35)
9. ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x)
10. மோட்டோ இ14 (Moto E14)

எந்தெந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்?
மேற்கண்ட 10 ஸ்மார்ட்போன்களில் 2 மாடல்களின் வெளியீட்டு தேதி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்று - கூகுள் பிக்சல் 8ஏ, இது மே 14 ஆம் தேதியன்று நடக்கும் கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும். இரண்டாவது - விவோ வி30இ, இது மே 2 அன்று அறிமுகமாகும்.

மீதமுள்ள ஸ்மார்ட்போன்களில் 8 ஸ்மார்ட்போன்களில் - ஒன்பிளஸ் நோர்ட் 4, ரியல்மி ஜிடி 5 ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ, மோட்டோ இ14 ஆகிய 4 மாடல்களும் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும். கடைசியாக உள்ள போக்கோ எப்6, சாம்சங் கேலக்ஸி எப்55, சாம்சங் கேலக்ஸி எம்35, ஐக்யூ இஸட்9எக்ஸ் மாடல்கள் மே மாதத்தின் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஏப்ரல் மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (New Phones Launched in April 2024) அறிமுகம் ஆகின?
1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4)
2. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro)
3. சாம்சங் கேலக்ஸி எம்55 (Samsung Galaxy M55)
4. ரியல்மி நார்சோ 70 (Realme Narzo 70)

5. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)
6. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G)
7. விவோ டி3எக்ஸ் (Vivo T3x)
8. மோட்டோ ஜி64 (Moto G64)
9. ரியல்மி 12எக்ஸ் (Realme 12x)

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன?
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ. 21,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்55 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 70 ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 1286ஜிபி ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ டி3எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போனின் 8ஜிபி +128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக ரியல்மி 12எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 9 புதிய ஸ்மார்ட்போன்களில் எதுவுமே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மே மாதம் அறிமுகமாகும் புதிய போன்களுக்காக காத்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
New Smartphones Launched in India in April 2024 and Upcoming New Phones to Launch in May 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X