நல்ல மாசம் பொறக்குது.. OnePlus நோர்ட் 3 முதல் Nothing போன் 2 வரை.. மொத்தம் 10 புது போன்கள் அறிமுகமாகுது!
இந்த ஜூலை மாதமானது, பல வகையான புதிய ஸ்மார்ட்போன்களின் (New Smartphones)அறிமுகத்தால் மூழ்கடிக்கப்பட உள்ளது என்றே கூறலாம். இம்மாதம் ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் நத்திங் (Nothing) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகிறது என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அது தவறு!
ஏனென்றால், சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), ஒப்போ (Oppo), ஐக்யூ (iQoo) போன்ற நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களும் கூட இந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள், சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இதோ:

01. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G): இது வருகிற ஜூலை 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட், 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், பெரிய 6.74-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம்.
02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) இதுவும் ஜூலை 5 ஆம் தேதியன்று அறிமுகமாகிறது. இது அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும், ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் இயக்கப்படலாம். 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியுடன் வரலாம்.
03. ரியல்மி நார்சோ 60 சீரீஸ் (Realme Narzo 60 Series) இது ஜூலை 6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் கீழ் ரியல்மி நார்சோ 60 மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். நார்சோ 60 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட்டுடன் வரலாம்.
04. நத்திங் போன் 2 (Nothing Phone 2): இது ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவேபிளிப்கார்ட் வழியாக ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 4700mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
05. சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34) இது வருகிற ஜூலை 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்பிளே, பெரிய 6000mAh பேட்டரி மற்றும் 50எம்பி மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
06. ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQoo Neo 7 Pro): இது ஜூலை 4 ஆம் தேதியன்று அறிமுகமாகிறது. அமேசான் இந்தியா இணையதளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாடிராகன் 8+ ஜென் 1 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 120W பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
07. ஒப்போ ரெனோ 10 ப்ரோ சீரீஸ் (Oppo Reno 10 Pro Series) : இது வருகிற ஜூலை 10 ஆம் தேதியன்று அறிமுகமாகும். இதன் கீழ் ஒப்போ ரெனோ 10 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். இரண்டுமே 5எம்பி மெயின் கேமராவை கொண்டிருக்கும்.
08. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5): இது ஜூலை மாதத்தின் இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, 7.6 இன்ச் டைனமிக் அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 6.2 இன்ச் டைனமிக் அமோஎல்இடி எக்ஸ்டர்னல் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் போன்றவைகளை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








