Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. 2 ரெட்மி, 2 ஒன்பிளஸ், 1 சாம்சங்.. இந்த ஆகஸ்ட்டில் மொத்தம் 10 புது போன்கள் அறிமுகம்!

இந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் ரெட்மி, ஒன்பிளஸ் தொடங்கி சாம்சங், ரியல்மி வரையிலாக.. கிட்டத்தட்ட அனைத்து பிரபலமான மொபைல் நிறுவனங்களிடம் இருந்தும்.. வெவ்வேறு விலை பிரிவின் கீழ்.. மொத்தம் 10 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது? அவைகள் சரியாக எந்த தேதியில் அல்லது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? புதிதாக வரவுள்ள 10 புதிய மொபைல் போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

இந்த ஆகஸ்ட்டில் மொத்தம் 10 புது போன்கள் அறிமுகம்!

01. ரெட்மி 12 4ஜி மற்றும் ரெட்மி 12 5ஜி: இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட்மி 12 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 5 ஜென் 2 சிப், பெரிய 6.79-இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, 50MP ப்ரைமரி கேமரா, உறுதியான கிளாஸ் பேக் பேனல் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகும். இது ரூ.9999 க்கு வெளியாகலாம்.

02. மோட்டோரோலா ஜி14: இதுவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 6.5-இன்ச் FHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே (LCD), யுனிசாக் டி616 சிப்செட், 50MP மெயின் கேமரா, டால்பி அமோஸ் ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.10,000 முதல் ரூ,.11,000 க்குள் வெளியாகலாம்.

03. இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ: நத்திங் போன் சீரிஸால் ஈர்க்கப்பட்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.67-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 8050 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம். இது ரூ.20,000 க்குள் வெளியாகலாம்.

04. சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி: இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சாம்சங் 5ஜி மாடல் ஆனது 120Hz சூப்பர் AMOLED டிஸ்பிளே, பெரிய 6,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

05. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி: இதுவும் இந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக உள்ளது (சரியான தேதி வெளியாகவில்லை). இது மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான AMOLED டிஸ்பிளே, டூயல் ரியர் கேமராக்கள் போன்ற அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

06. டெக்னோ போவா 5 சீரீஸ்: டெக்னோ நிறுவனம் தனது போவா 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது. டெக்னோ போவா 5 ப்ரோ மாடல் ஆனது தனித்துவமான பின்புற வடிவமைப்பு மற்றும் எல்இடி லைட்ஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.17,999 க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அதன் சீன வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர்ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும். இது சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.42,000 க்கு வெளியாகலாம்.

08. ஒன்பிளஸ் ஓப்பன்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வரும் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1 லட்சத்திற்குள் என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09. ரியல்மி ஜிடி 5 சீரீஸ்: அதிகாரப்பூர்வ டீஸர் வெளியாகி விட்டதால், இதுவும் இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம். இதன் ரியல்மி ஜிடி 5 மற்றும் ரியல்மி ஜிடி 5 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். இது 6.74-இன்ச் 144Hz OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது

10. ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3: இந்த பட்டியலில் கடைசியாக உள்ளது ஷாவ்மீ நிறுவனத்தின் மிக்ஸ் ஃபோல்ட் 3 மாடல் ஆகும். உடனடி வெளியீட்டிற்கு தயாராக உள்ள இந்த ஷாவ்மீ மாடல் ஆனது லைகாவால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்களுடன் வரும் என்றும், மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அதன் முன்னோடியான ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 2-ஐ விஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Smartphones Launch August 2023 India including Redmi 12 Moto G14 Tecno Pova 5 Inifnix GT 10 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X