Home
Mobile

நவ.29 குள்ள நச்சுனு 9 புது Smartphone அறிமுகம்.. வரிசை கட்டும் Vivo, OPPO, Realme, Redmi, iQOO.. இதோ லிஸ்ட்!

2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய வெளியீடுகளை (New Smartphone Launch) நிறுத்து வதாக தெரியவில்லை. அடுத்த வாரம் மட்டுமே.. அதாவது நவம்பர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதிக்குள் மட்டுமே 5 நிறுவனங்கள் மொத்தம் 9 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன. என்னென்ன மாடல்கள்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

01. ஒப்போ ரெனோ 13 சீரீஸ் (Oppo Reno 13 Series): ஒப்போ ரெனோ 13 சீரிஸ் நவம்பர் 25 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 13 (Oppo Reno 13) மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ (Oppo Reno 13 Pro) என 2 மாடல்கள் இருக்கும்.

நவ.29 குள்ள.. நச்சுனு 9 புது Smartphone அறிமுகம்!

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் உடன் வரும்; கலர்ஓஎஸ் 15 மூலம் இயக்கப்படும்; 1.5கே பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்; வேறுபாடுகளை பொறுத்தவரை வெண்ணிலா வேரியண்ட் 5,600எம்ஏஎச் பேட்டரி உடனும் ப்ரோ வேரியண்ட் 5,900எம்ஏஎச் பேட்டரி உடனும் வரும். விலையை பொறுத்தவரை முறையே ரூ.34,990 க்கும், ரூ.49,999 க்கும் அறிமுகமாகலாம்.

02. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): இது இந்தியாவில் நவம்பர் 26 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Chipset) உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாகும்.

மேலும் இது 6.78-இன்ச் 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் LTPO OLED டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங், 50எம்பி (வைட்) + 50எம்பி (3எக்ஸ் டெலிஃபோட்டோ) + 8எம்பி (அல்ட்ராவைடு) ட்ரிபிள் கேமரா செட்டப், அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், 120W சார்ஜிங், 5,800mAh பேட்டரி ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். விலை ரூ.69,999 - ரூ.74,999-க்குள் இருக்கலாம்.

03.ரெட்மி கே80 சீரிஸ் (Redmi K80 Series): இது நவம்பர் 27 அன்று சீனாவில் அறிமுகமாகும். இதன்கீழ் ரெட்மி கே80 (Redmi K80) மற்றும் ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) என 2 மாடல்கள் இருக்கும். வெண்ணிலா வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டையும், ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பை கொண்டிருக்கும். விலை முறையே ரூ.54,990 மற்றும் ரூ.54,990 ஆக இருக்கலாம்.

04. விவோ எஸ்20 சீரீஸ் (Vivo S20 Series): இது நவம்பர் அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இதன்கீழே விவோ எஸ்20 (Vivo S20) மற்றும் விவோ எஸ்20 ப்ரோ (Vivo S20 Pro) என 2 மாடல்கள் இருக்கும். ப்ரோ வேரியண்ட் டைமென்சிட்டி 9300 பிளஸ் சிப்பையும், வெண்ணிலா வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பையும் பேக் செய்யலாம். விலை முறையே ரூ.34,990 மற்றும் ரூ.45,990 ஆக இருக்கலாம்.

05. ஐக்யூ நியோ 10 சீரீஸ் (iQOO Neo 10 Series): இது நவம்பர் 29 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்கீழ் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மற்றும் ஐக்யூ நியோ 10 ப்ரோ (iQOO Neo 10 Pro) என 2 மாடல்கள் இருக்கும். இரண்டுமே பெரும்பாலான அம்சங்களை பகிர்ந்து கொள்ளும். அதாவது இரண்டுமே LTPO பிளாட் OLED டிஸ்பிளே, அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், 120W வயர்டு சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும்

இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் சிப்செட்களாக இருக்கும். வெண்ணிலா வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கும். மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது டைமன்சிட்டி 9400 சிப் மூலம் இயக்கப்படும். விலையை பொறுத்தவரை, முறையே ரூ.30,990 க்கும் மற்றும் ரூ.37,990க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
New Smartphone Launches From Vivo Oppo Realme Redmi iQOO in India China November 25 26 27 28 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X