என்எஃப்சி தொழில் நுட்பத்துடன் புதிய சேன் டைகோ ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
என்எஃப்சி தொழில் நுட்பத்துடன் புதிய சேன் டைகோ ஸ்மார்ட்போன்!
என்எஃப்சி தொழில் நுட்பம் கொண்ட சிறந்த ஸ்மார்டபோனை வழங்குகிறது ஆரஞ்சு நிறுவனம். சேன் டைகோ என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சேன்டா க்ளேரா என்ற பெயரையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தும் சில புதிய ஸ்மார்ட்போன் வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4 இஞ்ச் திரையினை வழங்கும். இதில் உள்ள எச்டிஎம்ஐ தொழில் நுட்பத்தின் மூலம் டிவியுடன் இணைக்கவும் முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும் கேமராவினை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் முகப்பு கேமராவினையும் பெறலாம்.

117 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரஞ்சு நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போனின் விலை கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது. சேன் டைகோ ஸ்மார்ட்போன் ரூ.16,000 விலை கொண்டதாக இருக்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போன் இங்கிலாந்து மொபைல் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்