OnePlus-ன் புதிய முடிவு! அவசரப்பட்டு 10 Pro, 10T மாடலை வாங்கிடாதீங்க!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 10T ஆனது ஒரு மாதத்திற்கு முன்பு தான் - ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் மற்றும் 'மின்னல் வேக" பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகமானது.

ஆனால் 10டி மாடலின் பாஸ்ட் சார்ஜிங்கை விட வேகமானது எது தெரியுமா? ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் தான்!

இந்நேரம் உங்களுக்கே புரிந்து இருக்கும்!

இந்நேரம் உங்களுக்கே புரிந்து இருக்கும்!

அட ஆமாங்க! ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும், அதுவும் இந்த 2022 ஆம் ஆண்டுக்குள்ளேயே வெளியாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10டி போன்ற மாடல்களை வாங்காமல் அடுத்த மாடலுக்காக காத்திருக்கலாமா? வேண்டாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அடுத்த மாடல்.. கண்டிப்பாக OnePlus 10 ஆக இருக்காது!

அடுத்த மாடல்.. கண்டிப்பாக OnePlus 10 ஆக இருக்காது!

ஏனெனில் இந்த 2022-லேயே அறிமுகமாகும் என்று கூறப்படும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 8 Gen 2 SoC-ஐ பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது!

ஆக வரப்போகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக ப்ரோ மாடலாகத்தான் இருக்கும். அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 10 மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை.

OnePlus-இன் புதிய முடிவு!

OnePlus-இன் புதிய முடிவு!

ஏனென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 11 சீரீஸ் மாடல்களை சற்றே முன்னதாக அறிமுகம் செய்வதில், அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது; அதுவும் Snapdragon 8 Gen 2 உடன்!

ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 10 மாடலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், நீங்கள் ஏமாற்றம் அடைய அதிக வாய்ப்புள்ளது போல் தெரிகிறது!

வரப்போவது OnePlus 11 Pro-வாக இருக்கலாம்!

வரப்போவது OnePlus 11 Pro-வாக இருக்கலாம்!

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக கிடைத்த தகவலின்படி, இந்நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 11 ப்ரோ என்று அழைக்கப்படலாம் மற்றும் அது நவம்பர் மாதத்திலேயே கூட அறிமுகம் செய்யப்படலாம்.

ஆக ஒன்பிளஸ் 10 ப்ரோ அல்லது ஒன்பிளஸ் 10டி போன்ற மாடல்களை வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தாலும் கூட, கொஞ்சம் பொறுமை காக்கவும்; எதிர்பார்க்கப்படுவது போல ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடல் ஆனது, இந்த ஆண்டே அறிமுகமானால், பேசாமல் அதையே வாங்கி விடலாம் அல்லவா?

அப்போ OnePlus 10T சுமாரான போன்-ஆ?

அப்போ OnePlus 10T சுமாரான போன்-ஆ?

இல்லவே இல்லை! 10-க்கு 8 மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு OnePlus 10T ஒரு வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தான். இருந்தாலும் கூட, அதில் சில குறைகளும் உள்ளன.

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் கேமரா குவாலிட்டி சராசரியாகவே உள்ளது. இதன் கீழ் 'கேப்சர்' செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஐபி ரேட்டிங், eSIM ஆதரவு போன்றவைகளும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்களொரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர்/ ரசிகை என்றால் 10டி மாடலில், அலெர்ட் ஸ்லைடரை கண்டிப்பாக 'மிஸ்' செய்வீர்கள்!

வெறும் குறைகள் மட்டும் தானா.. நிறைகளே இல்லையா?

வெறும் குறைகள் மட்டும் தானா.. நிறைகளே இல்லையா?

யார் சொன்னது? விமர்சகர்களால் கூட OnePlus 10T ஸ்மார்ட்போனின் "வேகமான" பெர்ஃபார்மென்ஸ், பிரகாசமான டிஸ்பிளே, எக்கச்சக்கமான ரேம் மற்றும் ஸ்டோரேஜை பாராட்டாமல் இருக்க முடியாது!

போதாக்குறைக்கு இது நல்ல பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனாகவும் உள்ளது; கூடவே சூப்பர்-குவிக் சார்ஜிங் ஆதரவு வேற!

ஒட்டுமொத்தமாக 10டி மாடலை "கொடுக்குற காசுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன்" என்றே கூறலாம்!

Best Mobiles in India

English summary
New Smartphone 2022 OnePlus 11 Pro Expected to Launch This Year End Powered By Snapdragon 8 Gen 2 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X