குறட்டை விடுவதை நிறுத்த புதிய ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்.!

By Prakash
|

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தற்சமயம் புதிய ஸ்மார்ட் மெத்தையை உருவாக்கியுள்ளது,அதில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சனையை சரி செய்து, சவுகரியமான உறக்கத்தை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் மெத்தை.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்லீப் நம்பர் என்ற நிறுவனம் ஸ்லீப் நம்பர் 360 ஐ10 என்ற புதிய ஸ்மார்ட் மெத்தை உருவாக்கியுள்ளது, மேலும் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2018 நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட் மெத்தை அறிமுகம் செய்யப்பட்டது.

குறட்டை பிரச்சனையால் அதிக இடங்களில் பிரச்சனை ஏற்படும் நிலையில், இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்லீப் நம்பர் 360 ஐ10 ஸ்மார்ட் மெத்தை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட் மெத்தை வெளிவந்துள்ளது.

குறட்டை விடுவதை நிறுத்த புதிய ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்.!

பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் இந்த ஸ்மார்ட் மெத்தை, அதன்பின்பு இரவு முழுக்க நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என ஸ்லீப் நம்பர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மெத்தையில் இரண்டு ஏர்-சேம்பர்கள் இடம்பெற்றுள்ளது, அவை மெத்தையின் சவுகரியத்தை கன நேரத்தில் டிராக் செய்து அதில் உறங்குபவர்களுக்கு தகுந்தபடி சரி செய்யும்.

இந்த ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுகு பகுதி அல்லது வயிற்று பகுதிக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட மெத்தை மாற்றுக்கொள்ளும்.

குறட்டை விடுவதை நிறுத்த புதிய ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்.!

ஸ்மார்ட் மெத்தையை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிபாகத்தை வெப்பமாக்கும். மேலும் இவற்றில் ஸ்மார்ட் அலாரம் இடம்பெற்றுள்ளது. சிஇஎஸ் 2018 வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மெத்தையின் விலைப் பொறுத்தவரை 4000 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.2,54,420-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
New Smart Bed Unveiled at CES 2018 That Can Adjust Itself to Stop Your Snores ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X