Home
Mobile

சத்தமின்றி 6000எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி கேமராவுடன் புதிய Samsung 5ஜி போன் அறிமுகம்! இந்த போனை விட்ராதீங்க.!

இந்தியாவில் தொடர்ந்து பல அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது சாம்சங். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது சாம்சங் நிறுவனம். இந்நிலையில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்54 போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக இந்த புதிய போன் 108எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது முதலில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய போன் 199 கிராம் எடை கொண்டுள்ளது.

108எம்பி கேமராவுடன் புதிய Samsung 5ஜி போன் அறிமுகம்.!

குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும். பின்பு 2,400 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் 5 உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1380 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

108எம்பி கேமராவுடன் புதிய Samsung 5ஜி போன் அறிமுகம்.!

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் இஸ்ரேல், ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற சில நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

108எம்பி கேமராவுடன் புதிய Samsung 5ஜி போன் அறிமுகம்.!

கூடிய விரைவில் இந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் சில்வர் நிறத்தில் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எம்54 5ஜி போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த போனின் விலை அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy M54 5G Phone Launched With 6,000mAh Battery, 108MP Camera: check full details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X