Home
Mobile

செஞ்சிட்டான் அமேசான்.. வந்து 1 வாரம் ஆகாத 6000mAh பேட்டரி புது Samsung 5ஜி போன்.. ரூ.2000 விலை குறைப்பு!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) மாடலானது, அமேசான் பிரைம் டே விற்பனையின் (Amazon Prime Day Sale) கீழ் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி முக்கிய அம்சங்கள்: இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த புதிய கேலக்ஸி எம் சீரிஸ் போன், 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

வந்து 1 வாரம் ஆகாத புது Samsung 5ஜி போன்.. ரூ.2000 விலை குறைப்பு!

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 8.5 ஓஎஸ்
- ஆறு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள்
- AI Voice Transcription போன்ற பல்வேறு AI டூல்கள்
- 6.7 அங்குல Full-HD+ Super AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
- Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட்
- LPDDR5x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ்
- 'பில்' (pill) வடிவ கேமரா யூனிட்டில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்

- 4K வீடியோக்களை பதிவு செய்யும் ஆதரவு
- ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6,000mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- பைபாஸ் சார்ஜிங்
- கீறல்களை தாங்கும் திறன் (4x scratch resistance)
- 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் தாங்கும் திறன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் (ஐபி ரேட்டிங் குறிப்பிடப்படவில்லை)

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அமேசான் ஆபர் விலை: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் மற்றும் 128GB ஆப்ஷனின் அசல் விலை ரூ.25,999 ஆகும்; ஆனால் அமேசானில் ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே போல் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ.28,999 ஆகும். ஆனால் அமேசானில் ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது

இறுதியாக, 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட ஹை-எண்ட் மாடல் உள்ளது, இதன் அசல் விலை ரூ.33,999 ஆகும். ஆனால் அமேசானில் தற்போது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எல்லா மாடல்கள் மீதும் ரூ.20000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிளேஸ் ப்ளூ (Blaze Blue) மற்றும் ரோக் ரெட் (Rogue Red) ஆகிய வண்ண கலர்களில் வாங்க கிடைக்கிறது.

இதற்கு போட்டியாக, அமேசானில் ஒன்பிளஸ் என்6 ஆனது ரூ.22,999 க்கு வாங்க கிடைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ​​பெரும்பாலான தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்பிளஸ் என்6 5ஜி மாடலை விட சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி முன்னிலையில் இருப்பது தெளிவாகிறது. டிஸ்பிளேவிலும் சரி, செயல்திறனிலும் சரி, கேமராவிலும் சரி, ஓஎஸ் அப்டேட்களிலும் சரி - சாம்சங் நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தை விட முன்னிலையில் உள்ளது வெளிப்படை.

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy M47 5G Phone With 6000mAh Battery gets Rs 2000 Discount in Amazon Prime Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X