ஆரம்பமே ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. விற்பனைக்கு வந்தது புது SAMSUNG போன்.! என்ன மாடல்?
சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இந்த அசத்தலான கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை சலுகையுடன் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. ஆனால் ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி ( HDFC) வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எப்34 5ஜி போனை ரூ.16,999-விலையிலும், 8ஜிபி வேரியண்டை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். எலக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக அமோலெட் டிஸ்பிளே இதில் இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இந்த போனின் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது.
5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








