இதைவிட கம்மி விலைக்கு நல்ல 5G போன் கிடைக்கவே கிடைக்காது.! இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.!
சாம்சங் நிறுவனத்தின் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மார்ச் 24-ம் தேதி மதியம் 12-க்கு இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசத்தலான கேமரா, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும்.

அட்டகாசமான அம்சங்கள்: இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த சாமசங் போன் வெளிவரும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி எப்14 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 வருட பாதுகாப்பு அப்டேட்கள் மற்றும் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் இந்த புதிய சாம்சங் போனுக்கு கிடைக்கும். பின்பு 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய கேலக்ஸி எப்14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ரியர் கேமராவுடன் அறிமுகமாகும். எனவே இந்த இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.
அதேபோல் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி எப்14 ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, 4ஜி வோல்ட்,வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய சாம்சங் போன் குறைந்த எடையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கம்மி விலை: குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்14 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








