Home
Mobile

தரமான சிப்செட் வசதியுடன் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி ஏ24.! எப்போது அறிமுகம்?

சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy A24 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ24

கேலக்ஸி ஏ24

குறிப்பாக கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புல் எச்டி டிஸ்பிளே

புல் எச்டி டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ24 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன்.

எக்ஸிநோஸ் 7904 சிப்செட்

எக்ஸிநோஸ் 7904 சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ24 போன் ஆனது எக்ஸிநோஸ் 7904 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன்

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன்

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.

எக்ஸிநோஸ் 850 சிப்செட்

எக்ஸிநோஸ் 850 சிப்செட்

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். பின்பு கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy A24 phone Specifications leaked online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X