Home
Mobile

பெரிய தப்பு பண்ணிட்டீங்களே Samsung: முக்கிய வசதி இல்லாமல் அறிமுகமான புதிய போன்.!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ24 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது வியட்நாமில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரவாகப் பார்ப்போம். அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் Super AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

முக்கிய வசதி இல்லாமல் அறிமுகமான புதிய Samsung போன்.!

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது புதிய சாம்சங் போன்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனில் உள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

முக்கிய வசதி இல்லாமல் அறிமுகமான புதிய Samsung போன்.!

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 195 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் இந்த போனில் 5ஜி வசதி கிடையாது. அதாவது 4ஜி வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது.

முக்கிய வசதி இல்லாமல் அறிமுகமான புதிய Samsung போன்.!

4ஜி போனை இறக்கிவிட்டு பெரிய தவறு செய்துவிட்டது சாம்சங் நிறுவனம். மேலும் டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல். தற்போது வரை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 போனின் விலை மற்றும் விற்பனை விவரத்தை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.

கூடிய விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை அந்நிறுவனம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க நினைக்கும் மக்கள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy A24 phone launched with 5000mAh battery, 50MP camera: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X