பட்ஜெட் விலையில் இதைவிட ஒரு நல்ல 5G போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா: அசத்தும் புதிய Samsung போன்.!

|

சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது Sammobile இன் அறிக்கையின்படி இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி

குறிப்பாக இந்த போன் அட்டகாசமான வடிவமைப்புடன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

எங்கள பார்த்தா எப்படி தெரியுது? எங்கள பார்த்தா எப்படி தெரியுது? "தேவை இல்லாத ஆணிகளை புடுங்க" இந்திய மார்க்கெட்டுக்கு வந்த சைனீஸ் போன்!

 2408 x 1080 பிக்சல்ஸ்

2408 x 1080 பிக்சல்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எஇல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?

5ஜி ஆதரவு

5ஜி ஆதரவு

5ஜி ஆதரவுடன் தனித்துவமான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.எனவே இப்போது நாம் பயன்படுத்தும் 5ஜி சேவைக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக பயன்படும் என்றே கூறலாம்.

டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!

 13எம்பி கேமரா

13எம்பி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாச்சைக் கொண்டிருக்கிறது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!

ஹீலியோ ஜி80 சிப்செட்

ஹீலியோ ஜி80 சிப்செட்

கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் 5ஜி போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!

4ஜிபி/6ஜிபி ரேம்

கேலக்ஸி ஏ14 5ஜி போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ14 போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

அதேபோல் டூயல் சிம், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new Samsung Galaxy A14 5G smartphone will be launched in India in the coming weeks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X