சொக்கவைக்கும் லுக்.,Samsung கேலக்ஸி ஏ04எஸ் போன் அறிமுகம்: என்ன விலை?

|

சாம்சங் நிறுவனம் தரமான சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அருமையான சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 விற்பனை?

விற்பனை?

தற்போது இந்த கேலக்ஸி ஏ04எஸ் போன் அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை போன்ற தகவல்கள்
இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுகளவும் வாய்ப்பில்ல ராஜா: டிரம்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் Google., இப்போ இதுக்கும் ஆப்பு!கடுகளவும் வாய்ப்பில்ல ராஜா: டிரம்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் Google., இப்போ இதுக்கும் ஆப்பு!

நிறங்கள்

நிறங்கள்

அதேபோல் கருப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Zomato புது அம்சம்: டெல்லி டூ குமரி, விமானத்தில் உணவு டெலிவரி.. மொத்த இந்திய உணவும் உங்க கையில்!Zomato புது அம்சம்: டெல்லி டூ குமரி, விமானத்தில் உணவு டெலிவரி.. மொத்த இந்திய உணவும் உங்க கையில்!

 அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

 எக்ஸிநோஸ் சிப்செட் வசதி

எக்ஸிநோஸ் சிப்செட் வசதி

அதேபோல் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட்போன்.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டுஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!

அருமையான கேமரா

அருமையான கேமரா

இந்த புதிய ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

 சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆனால் இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..

வேறலெவல் கனெக்டிவிட்டி

வேறலெவல் கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 195 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy A04s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X