சத்தமின்றி Samsung அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்: என்ன விலை?
சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy A04e ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கேலக்ஸி ஏ04இ
ஆனால் இந்த கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை சாம்சங் நிறுவனம். விரைவில்இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்சிடி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புமிகவும் அருமையாக உள்ளது.

டூயல் ரியர் கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி ஏ04இ போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட்ஆதரவு உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12
சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கனெக்டிவிட்டி
குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications