Samsung-ன் புது சிங்கக்குட்டி.. 5ஜி, 6000mAh பேட்டரி, டூயல் கேமரா.. வீட்டுக்கு 2 ஆர்டர் விழும் விலையில்!
பட்ஜெட் விலையில் 5ஜி ஆதரவு உடன் ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை தேடும் இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்து சாம்சங் (Samsung) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) மாடலாகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி மாடல் ஆனது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்யும் படியாக, இந்த ஸ்மார்ட்போன் பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டு உள்ளது. மேலும் அவைகளின் வழியாக சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன், முக்கிய அம்சங்கள் ஆகியவைற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

கூகுள் பிளே (Google Play) கன்சோலில் ஆதரிக்கப்படும் டிவைஸ்களின் பட்டியல் இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி மாடல் இடம்பெற்றுள்ளது. ஆக இது விரைவில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிக்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, புதிய 5ஜி மாடல் ஆனது முன்னதாக வெளியான பழைய 4ஜி மாடலை போலவே ரியர் டிசைனை கொண்டிருக்கும் மற்றும் டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் உடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் MT6835V/TZ சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது 2.4ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக்டு ஸ்பீடை வழங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 300 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 720x1,600 பிக்சல் ரெசல்யூஷன் உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம், 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். விலை ரூ.10,000 க்குள் (ரூ.9,499) இருக்கலாம். கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் மேலும் 2 புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாக உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) மாடல்கள் ஆகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே குறிப்பிடத்தக்க கேமரா ஹராட்வர் மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட்பிரிக்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய இரண்டுமே வெளியாகும் பிராந்தியத்தை பொறுத்து சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் அல்லது சாம்சங்கின் இன்டர்னல் ஐசோசெல் எஸ்5கேஜிஎன்ஜே சென்சாரை உள்ளடக்கிய புதிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம்.
எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? முந்தைய அறிக்கைகள் துல்லியமாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஆகிய 2 மாடல்களுமே பிப்ரவரி 2026 இல் அறிமுகப்படுத்தலாம், அதாவது அதன் வழக்கமான 2026 மார்ச் அட்டவணையை விட சற்று முன்னதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் (ரூ.34,990) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள சம்சந்த் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் (ரூ.45,990) அறிமுகம் செய்யப்படலாம்.
அல்ட்ரா ஸ்லிம் மாடலுக்கு டாட்டா சொன்ன சாம்சங்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, சாம்சங் நிறுவனம் அடுத்த "அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனை" அறிமுகப்படுத்தும் திட்டத்திலிருந்து விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ்ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கான திட்டங்களை ரத்து செய்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
அல்ட்ரா ஸ்லிம் டிசைன்கள் ஆரம்பகால கவனத்தை ஈர்த்திருந்தாலும், சமீபத்திய விற்பனை போக்குகள் ஆனது வாடிக்கையாளர்கள் - பேட்டரி லைஃப், கேமரா நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்தபட்ச தடிமனை விட நிலையான செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு (கொரியா எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி) சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் ஸ்மார்ட்போனின் மேம்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








