Home
Mobile

செஞ்சிவிட்ட Samsung.. சத்தியமா விலை ரூ.7999 தான்.. 6.7-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா.. 5000mAh பேட்டரி!

Samsung New Model 2024: சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G) ஸ்மார்ட்போனின் மீது திடீரென ரூ.2.500 விலைக்குறைப்பை அறிவித்ததும்.. எப்போது வேண்டுமானாலும் கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில்.. சாம்சங் நிறுவனம் அதன் எம்-சீரிஸின் கீழ் சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்து "ஷாக்" கொடுத்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ஸ்மார்ட்போனாகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

செஞ்சிவிட்ட Samsung.. சத்தியமா விலை ரூ.7999 தான்!

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி வரையிலான ரேம் மற்றும் 64ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்கலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இதற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 8எம்பி கேமரா பூர்த்தி செய்யும்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெறியன்ட்டின் விலை ரூ.7,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்லீக் மின்ட் க்ரீன் (Sleek Mint Green) ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Samsung India Website), பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனிற்கு பதிலாக வேறு எந்தெந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் சாம்சங் கேலக்ஸி எம்05-ன் ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும் ரியல்மி சி63 (Realme C63), ரூ.10,498 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G), ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும் போக்கோ எம்6 (POCO M6) மற்றும் ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி 12 (Redmi 12) ஆகியவைகளை கருத்தில் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மீதான விலை குறைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதுமே ரூ.2,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது. புதிய விலைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி.

Best Mobiles in India

English summary
New Samsung 4G Phone Under Rs 8000 Galaxy M05 Launched in India See Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X