Home
Mobile

ஒருவழியாக அறிமுக தேதி கிடைச்சுருச்சு.. Samsung-ன் புது Slim போன்.. மார்க்கெட்ல எத்தனை போன் காலி ஆக போகுதோ!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் சூப்பர்-ஸ்லிம் மாடல் ஒன்று அறிமுகமாகும் என்றும்.. அது கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) என்று அழைக்கப்படும் என்றும்.. இன்று நேற்று அல்ல, கடந்த பல வாரங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்னன. ஆனால் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் - காத்திருப்போர்களை கடுப்பேற்றி வந்தது.

இதற்கிடையில் அவர்களை எல்லாம் இன்னும் கடுப்பேற்றும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் 2025 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது. குறிப்பாக இது ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

ஒருவழியாக அறிமுக தேதி கிடைச்சுருச்சு.. Samsung-ன் புது Slim போன்!

தற்போது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலானது - சாம்சங் கேலக்ஸி எஸ்25 லாட்ஜ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 2025 மே 13 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும். அதாவது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.80,999 க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது

இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.99,999 க்குவாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கு வாங்க கிடைக்கிறது. 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,65,999 க்கும் க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக லீக் ஆன விவரங்கள் ​​சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பில்ட் மெட்டீரியல் மற்றும் டிஸ்பிளே பற்றிய விவரங்களை வெளிப்படுத்தின. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேமை (Titanium alloy middle frame) கொண்டிருக்கும்.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை போலவே இருக்கும் என்று அர்த்தம். இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ் சீரீஸில் டைட்டானியம் பாடியை கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஐசிப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2கே ரெசல்யூஷன் வரும் என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்துகிறார். இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் காணப்படும் 3120 x 1440 பிக்சல்களை போலவே இருக்கும் என்றும், எஸ்25 மாடலில் உள்ள எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Report Suggests Samsung Galaxy S25 Edge Launch Date Postponed to 2025 May 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X