Home
Mobile

ஆல் ஏரியாவும் ஐயா கில்லிடா.. அறிமுகத்திற்கு ரெடியாகும் Redmi-யின் ஃபேமஸ் போன்கள்? அதுவும் 1 இல்ல.. 3 மாடல்கள்!

இந்தியாவிற்கு வந்த நாள் முதல் இன்று வரையிலாக, ரெட்மி (Redmi) நிறுவனத்தின் நோட் சீரீஸ் (Note Series) மாடல்கள் மீதான மவுசு சற்றும் குறைந்த பாடில்லை. ரெட்மி பிராண்டிங் ஸ்மார்ட்போனை வாங்கிய பலரும் நோட் சீரீஸ் மாடல்களையே அதிகம் தேர்வு செய்தனர்.

இந்தாண்டு தொடக்கத்தில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2023 ஜனவரியில் அறிமுகமான ரெட்மி நோட் 12 சீரீஸ் (Redmi 12 Series) போன்கள் கூட விற்பனையில் சக்கைப்போடு போட்டுகொண்டு இருக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகின.

அறிமுகத்திற்கு ரெடியாகும் Redmi-யின் ஃபேமஸ் போன்கள்?

இதற்கிடையில், ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi 13 Seris) ஸ்மார்ட்போன்கள் குறித்த முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. ஐடிஹோம் (ITHome) வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஒரு புதிய ரெட்மி மாடல் ஐஎம்இஐ (IMEI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்டர்னேஷனல் மொபைல் ஏக்யுப்மென்ட் ஐடென்டிட்டி (International Mobile Equipment Identity) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.

அது ரெட்மி 13 சீரிஸின் கீழ் உள்ள பலத்தரப்பட்ட மாடல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 12 சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 4ஜி என்கிற 4 மாடல்கள் அறிமுகமாகின.

அதேபோல ரெட்மி 13 சீரீஸின் கீழும் ரெட்மி நோட் 13 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி என்கிற 3 மாடல்கள் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும். இருப்பினும் ரெட்மி நோட் 13 சீரிஸின் ஒரு 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்படுவது சந்தேகம் தான்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரெட்மி நிறுவனமானது நோட் 13 சீரீஸ் இன்னும் வாயே திறக்கவில்லை. வழக்கமாக ஒரே சீரிஸின் 2 வெவ்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய ஓராண்டு இடைவெளியாவது ரெட்மிக்கு தேவைப்படும். அப்படி பார்க்கும் ரெட்மி 13 சீரீஸ் ஆனது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகமாகும்

ஒருவேளை ஐஎம்இஐ இணையதளம் வழியாக லீக் ஆன ரெட்மி மாடல் ஆனது நோட் 13 சீரீஸ் மாடலாக கூட இல்லாமல் போகலாம். ஏனென்றால், ரெட்மியின் தாய் நிறுவனமான ஷாவ்மீ (Xiaomi), வெவ்வேறு பெயர்களில் பல வகையான ஸ்மார்ட்போன்களில் பணியாற்றி வருகிறது.

அவைகள் அனைத்தும் அதே பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகவில்லை என்றாலும் கூட, சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான பின்னர் போக்கோ (Poco) பிராண்டிங்கின் கீழ் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக இந்திய சந்தையில் அறிமுகமாகும். அறியாதோர்களுக்கு போக்கோவும் கூட ஷாவ்மீ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 12 சீரீஸை பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 5ஜி ஆனது ரூ.17,999 க்கும், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது ரூ.24,999 க்கும், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது ரூ.29,999 க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
New Redmi Smartphone Spotted in IMEI Website Could be one of the Redmi Note 13 Series Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X