ஏப்ரல் 29 இல் அறிமுகமாகும் பக்காவான Redmi ஸ்மார்ட்போன்.! ரெடியா இருங்க...
ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி புதிய ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்த புதிய ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ (Redmi Note 12R Pro) ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்த போன் மாற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
குறிப்பாக 48எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி நோட் 12ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ரெட்மி நோட் 12 டர்போ அம்சங்கள்: ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 x1,080 பிக்சல்ஸ், எச்டிஆர், எச்டிஆர் பிளஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 + ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், Dolby Atmos stereo ஸ்பீக்கர்கள் என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனின் எடை 181 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications