அறிமுகமானது புதிய Redmi நோட் 12 டர்போ.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தரமான ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 12 டர்போ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.
குறிப்பாக ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிய ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 x1,080 பிக்சல்ஸ், எச்டிஆர், எச்டிஆர் பிளஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 + ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு வெள்ளை, நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், Dolby Atmos stereo ஸ்பீக்கர்கள் என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனின் எடை 181 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 12 டர்போஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1999 yuan (இந்திய மதிப்பில் ரூ.23,890) ஆக உள்ளது. பின்பு விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








