108எம்பி ரியர் கேமராவுடன் புதிய Redmi ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
விவோ, ஒப்போ, ஒன்பிளஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த புதிய போன் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 1080×2400பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 732ஜி 8என்எம் சிப்செட் வசதி உள்ளது. பின்பு இந்த போனில் அட்ரினோ 618 ஜிபியு வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் விலை 349.90 Euros (இந்திய மதிப்பில் ரூ.31,320). இந்த புதிய ரெட்மி போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் 5ஜி வசதி இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை.


Click it and Unblock the Notifications