Redmi நோட் 11எஸ் அறிமுக தேதி வெளியானது: சிறப்பம்சங்கள் என்னென்ன?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11எஸ்இ
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் இணையதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போதுஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தரமான டிஸ்பிளே
விரைவில் அறிமுகாகும் ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும்இந்த ரெட்மி போன்.

மீடியாடெக் பிராசஸர்
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியை கொண்டுள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றிபயன்படுத்த முடியும். மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.

சூப்பரான கேமரா
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ஹை-ரெஸ் ஆடியோ டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஐஆர் பிளாஸ்டர், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications