Home
Mobile

ஒன்பிளஸ் ஓரம்போ.. 108MP கேமரா.. 120W சார்ஜிங்.. 512GB மெமரி.. மிரட்டலான Redmi போன் ரெடி.. எந்த மாடல்?

கடந்த நவம்பர் மாதம் ரெட்மி நிறுவனம் ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ, ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செயத்தது. விரைவில் இந்த போன்கள் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு ரெட்மி கே70 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ, ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் ஓரம்போ..  மிரட்டலான Redmi போன் ரெடி.. எந்த மாடல்?

ரெட்மி கே70 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K70 Ultra Specifications): 6.67-இன்ச் ஒஎல்இடி 2கே டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ் ஓரம்போ..  மிரட்டலான Redmi போன் ரெடி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

50எம்பி சோனி IMX LYTIA 800 பிரைமரி சென்சார் + 108எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் ஓரம்போ..  மிரட்டலான Redmi போன் ரெடி.. எந்த மாடல்?

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் 12 போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் 12 போனை விடத் தரமான அம்சங்களுடன் ரெட்மி கே70 அல்ட்ரா போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Ultra will be launched early next year: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X