Home
Mobile

24ஜிபி ரேம்.. OLED டிஸ்பிளே.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புதிய Redmi 5ஜி போனின் அறிமுகம் உறுதி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. கடந்த சில மாதங்களில் இந்த ரெட்மி நிறுவனம் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜ போனை கொண்டுவர உள்ளது.

அதாவது ரெட்மி நிறுவனம் ஆகஸ்ட் 14-ம் தேதி புதிய ரெட்மி கே60 அல்ட்ரா (Redmi K60 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

24ஜிபி ரேம்.. புதிய Redmi 5ஜி போனின் அறிமுகம் உறுதி.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200+) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக இயக்க முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான போன். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும் என்றே கூறலாம்.

அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்கள் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதி, கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

24ஜிபி ரேம்.. புதிய Redmi 5ஜி போனின் அறிமுகம் உறுதி.. எந்த மாடல்?

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K OLED display) வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

5000 எம்எஏச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி போன். எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Redmi K60 Ultra smartphone will be launched on August 14: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X