Home
Mobile

அடுத்த மாதம் இந்தியாவில் களமிறங்கும் Redmi 11 பிரைம் 5ஜி.! என்னென்ன அம்சங்கள்?

ரெட்மி நிறுவனம் வரும் செப்டம்பர் தொடக்கத்தில் புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

மேலும் இப்போது இணையத்தில் கசிந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டிகார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராடவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி

குறிப்பாக இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ரெட்மி நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
No plan to ban Chinese phones below Rs 12,000: Minister: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X