ரெட்மி 11 பிரைம் 5ஜி, ரெட்மி 11 பிரைம் 4ஜி அறிமுகம்: பட்ஜெட் விலை.!
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 11 பிரைம் 5ஜி, ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் செப்டம்பர் 9-ம் தேதி அமேசான், எம்ஐ.காம் தளங்களில் விற்பனைக்கு வரும்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி டிஸ்பிளே
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி கேமரா
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி மாடல்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி சிப்செட்
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உடன் Mali-G57 GPU ஆதரவும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த போன் மீடோ கிரீன், குரோம் சில்வர் மற்றும் தண்டர் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 11 பிரைம் 4ஜி விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி 11 பிரைம் 4ஜி மாடலின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் விலை ரூ.14,999-ஆக உள்ளது. அதேபோல் ப்ளேஃபுல் க்ரீன், ஃப்ளாஷி பிளாக் மற்றும் பெப்பி பர்பிள் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 11 பிரைம் 4ஜி டிஸ்பிளே
ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 11 பிரைம் 4ஜி கேமரா
ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

ரெட்மி 11 பிரைம் 4ஜி சிப்செட்
அதேபோல் மீடியொடெக் ஹீலியோ 99 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன். மேலும்MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications