எப்பா இந்த சியோமி,விவோ.. நீங்க எல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க! 24ஜிபி ரேம் உடன் அறிமுகமானது புதிய 5G போன்..
நுபியா நிறுவனம் தனது 24ஜிபி ரேம் கொண்ட ரெட் மேஜிக் போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் ஆகிய போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த இரண்டு போன்களுகம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போன்கள் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 960ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த அட்டகாசமான போன்கள்.
குறிப்பாக ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 165 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேநேரம் சில நிமிடங்களில் இந்த போன்களை சார்ஜ் செய்துவிட முடியும்.

3.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ 740 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போன்கள். பின்பு இந்த இரண்டு போன்களிலும் Redmagic OS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.
8ஜிபி/12ஜிபி/16ஜிபி/24ஜிபி ரேம் மறறும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போன்கள். அதேபோல் இந்த இரண்டு போன்களும் இன்-டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்குகள் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன்கள்.
50எம்பி பிரைமரி கேமரா(Samsung GN5 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போன்கள். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளன இந்த அட்டகாசமான போன்கள்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.3 ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய போன்கள். குறிப்பாக ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,380) அதேபோல் ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ் போனின் ஆரம்ப விலை 5499 yuan (ரூ.62,405).


Click it and Unblock the Notifications








