Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே வாய் பிளக்குது.. 10000mAh பேட்டரி, 320W சார்ஜிங் உடன் புதிய Realme போன்!

7000mAh பேட்டரி உடன் ரியல்மி பி4 5ஜி மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்த வேகத்தில்.. ரியல்மி நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று அதன் 10000mAh+ பேட்டரி ஸ்மார்ட்போனை (Realme 10000mAh+ Battery Smartphone) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரியல்மி நிறுவனம் 10000mAh பேட்டரி கொண்ட ஒரு கான்செப்ட் போனை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் மேம்படுத்தப்பட்ட வயர்டு சார்ஜிங் ஸ்பீடிற்கான ஆதரவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10000mAh பேட்டரி, 320W சார்ஜிங் உடன் புதிய Realme போன்!

எக்ஸ் தளம் வழியிலான ஒரு பதிவில், ஆகஸ்ட் 27 அன்று "1x000mAh" பேட்டரி கொண்ட ஒரு புதிய போன் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து ரியல்மி டீஸ் செய்தது. இங்கே "x" என்று குறிப்பிடப்பட்டுள்ள பேட்டரி ஆனது குறைந்தபட்சம் 10,000mAh திறன் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; ஒருவேளை இது இன்னும் அதிக பேட்டரி திறனை கூட பேக் செய்யலாம்.

ரியல்மி நிறுவனத்தின் மற்றொரு எக்ஸ் தள பதிவானது - வரவிருக்கும் 10,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனில் 320W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறலாம் என்பதை குறிப்பிடுகிறது. ஆக ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகும் 10,000mAh பேட்டரி ஸ்மாட்போன் ஆனது அடுத்த தலைமுறை பேட்டரி மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகிய இரண்டையுமே கொண்டிருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த மே மாதத்தில், இந்நிறுவனம் 10000mAh பேட்டரி மற்றும் 320W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய ரியல்மி ஜிடி கான்செப்ட் போனை காட்சிப்படுத்தியது. இந்த போன் 8.5 மிமீ ஸ்லிம் டிசைன் மற்றும் 200 கிராமுக்கு சற்று அதிகமான எடையை கொண்டிருந்தது

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரியல்மி நிறுவனம் வெளியிட்ட 320W சூப்பர்சோனிக் சார்ஜ் தொழில்நுட்பம் ஆனது ஒரு ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை வெறும் 4 நிமிடங்கள் 30 வினாடிகளில் சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடம் சார்ஜ் செய்தால் 26 சதவீதம் பேட்டரியை நிரப்ப முடியும் என்றும், 50 சதவீதத்தை அடைய இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அம்சங்கள் எல்லாம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகும் 10,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனிலும் நாம் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் உட்பட பல முக்கிய விவரங்கள் அறிமுகத்திற்கு முந்தைய நாட்களில் வெளியாகலாம். அதுகுறித்த தகவல்கள் கிடைத்ததும் அதை உடனக்குடன் அப்டேட் செய்கிறோம்.

இப்போதைக்கு ரியல்மியின் கீழ் உள்ள பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் எது? அது 7,200mAh பேட்டரி, கொண்ட ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனின் சைனீஸ் வேரியண்ட் ஆகும். இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் இந்தியன் வேரியண்ட்டில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது ஆனால் பேட்டரி 7,000mAh செல் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகமான ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 8GB ரேம் + 256GB ஸ்டரோஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

மறுகையில் உள்ள ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டரோஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.19,499 மற்றும் ரூ.21,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X