Home
Mobile

நீ கலக்கு சித்தப்பு.. ரூ.10,000க்கு இன்னொரு புது போன்.. பிரீமியம் டிசைன், பவர்ஃபுல் அம்சங்கள்.. Realme அதகளம்!

பேக்-டூ-பேக் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் என்னை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை ரியல்மி (Realme) மீண்டும் நிரூபித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ரியல்மி சி53 (Realme C53) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த கையோடு, இந்நிறுவனம் மேலுமொரு புதிய பட்ஜெட்-விலை மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் இங்கே பேசுவது- ரியல்மி நிறுவனத்தின் சி-சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மி சி51 (Realme C51) ஸ்மார்ட்போனை பற்றித்தான். வழக்கம் போல இதுவும் ஒரு சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் தான் இருக்கும்.

ரூ.10,000க்கு இன்னொரு புது போன்.. Realme அதகளம்!

ஏனென்றால் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி சி55 மற்றும் ரியல்மி சி53 மாடல்கள் ஆனது ரூ.15,000 பட்ஜெட் பிரிவின் கீழ் தான் விற்பனை செய்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி53 ஆனது ரூ.9,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது.

ஆக எப்படி பார்த்தாலும் ரியல்மி சி51 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.10.000 க்குள் தான் இருக்கும். இருப்பினும் இது விலையை மீறிய சில அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் பராஸ் குக்லானியின் ட்வீட் படி, இதுவொரு 4ஜி போனாக இருக்கும்.

மேலும் ரியல்மி சி51 மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இடம்பெறலாம். இதன் டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்சும் இடம்பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி612 சிப்செட் உடனாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இயக்கப்படலாம்

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸுடன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா இருக்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி இஐ டி ஓஎஸ் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி சி51 ஆனது மின்ட் க்ரீன் மற்றும் கார்பன் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

வடிவமைப்பை பொறுத்தவரை, ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-டோன் ஃபினிஷ் மற்றும் பிரமிட்-ஸ்டைல் ​​ரியர் கேமரா அமைப்பை கொண்டு இருக்கலாம். அதாவது இது ரியல்மி சி53 மாடலை போலவே இருக்கிறது. இருப்பினும் ரியல்மி சி53 ஸ்மார்ட்போனானது சரியாக எப்போது அறிமுகமென்கிற வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான தகவல் வரும் நாட்களில் வெளியாகலாம்.

சமீபத்தில் அறிமுகமான ரியல்மி சி53 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது 108எம்பி மெயின் கேமரா, யுனிசாக் டி612 சிப்செட் (Unisoc T612 SoC), 5000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ டி வெர்ஷன் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.9,999 க்கும்; 6ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Realme Smartphone Under Rs 10000 Budget Realme C51 to Launch in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X