Home
Mobile

செப்.4 வரை.. அவரசப்பட்டு எந்த போனும் வாங்கிடாதீங்க.. இல்லனா வருத்தப்படுவீங்க.. வரிசைக்கட்டும் Realme போன்கள்!

செப்டம்பர் மாதம் தொடங்கும் வரையிலாக, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் செப்.4 ஆம் தேதி வரையிலாக, எந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனையும் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் குறிப்பிட்ட தேதியிலும் அதற்கு பிறகும், 2 புதிய ரியல்மி போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

செப்.4 ஆம் தேதியன்று, இந்திய சந்தையில் ரியல்மி சி51 (Realme C51) என்கிற புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமென்று அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே.. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ரியல்மி நார்சோ 60 சீரீஸின் கீழ் இன்னொரு புதிய மாடல் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செப்.4 வரை.. அவரசப்பட்டு எந்த போனும் வாங்க வேண்டாம்!

ரியல்மி சி51-ஐ தொடர்ந்து அறிமுகமாகும் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ரியல்மி இந்தியா வெளியிட்டுள்ள ஒரு புதிய டீசரில் 'மிஷன் எக்ஸ்' என்கிற வார்த்தையை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India Website) வழியாக வாங்க கிடைக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள ரியல்மி நர்ர்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

பெயர் குறிப்பிடுவது போலவே ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஆனது ரியல்மி நார்சோ 60 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த சீரீஸின் கீழ் நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகி இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த சீரிஸின் வெற்றியை மேலும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின் கீழ் தான் ரியல்மி நார்சோ 60எக்ஸ் அறிமுகமாக உள்ளது போல் தெரிகிறது. ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருவதால், நார்சோ 60எக்ஸ் ஆனது கண்டிப்பாக செப்டம்பரில் தான் அறிமுகமாகும். இருப்பினும் ரியல்மி சி51-ஐ போல சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G) ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" பதிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போனின் டீஸர் போட்டோவில் உள்ள கேமரா செட்டப் டிசைனும் கூட இதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது.

ஒருவேளை ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஆனது ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியான அம்சங்களையே பேக் செய்யும். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டிபிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்பக்க கேமராவை பொறுத்தவரை 64-மெகாபிக்சல் மெயின் ஓஐஎஸ் கேமரா + 2-மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 மூலம் இயங்குகிறது.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100 Plus Chipset) மூலம் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கடைசியாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் ஃபிரிண்ட் ஸ்கேனருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஆனது பெரும்பாலும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி-யின் விலை நிர்ணயத்துடன் ஒற்றுப்போகும். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.13,999 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரியல்மி நார்சோ 60எக்ஸ் மாடலின் விலையும் கூட ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Realme Phones Launch in India September 2023 Realme C51 Realme Narzo 60X Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X