போடு.. புது Realme போன்.. iPhone Pro போன்ற கேமரா, 50MP ரியர், 50MP செல்பீ, 7000mAh பேட்டரி, எந்த மாடல்?
ரியல்மி 15 (Realme 15) மற்றும் ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro) மாடல்களுடன் ரியல்மி 15 சீரிஸ் (Realme 15 Series) ஸ்மார்ட்போன்கள் முடிவுக்கு வந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கடந்த ஜூலை மாதம் உலகளவில் அறிமுகமான ரியல்மி 15 மற்றும் ரியல்மி 15 ப்ரோ மாடல்கள் வெறும் டீஸர் தான் என்று கூறும் அளவிற்கு ஒரு மாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அது ரியல்மி 15டி (Realme 15T) ஸ்மார்ட்போனாகும். X தளம் வழியாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Tipster Abhishek Yadav) வெளியிட்ட ஒரு லீக் தகவலின்படி, ஐபோன்களில் உள்ள கேமரா டிசைன் மற்றும் பெரிய பேட்டரி கெப்பாசிட்டி உடன், ரியல்மி 15 சீரிஸின் கீழ், விரைவில் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இதுகுறித்த லீக்டு புகைப்படங்கள் ஆனது ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது சமீபத்திய ஐபோன் ப்ரோ (iPhone Pro) மாடல்களில் உள்ள கேமரா செட்டப்பை போலவே தோற்றமளிக்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது. அதாவது மூன்று தனித்தனியான கேமரா ரிங்களை (Three distinct camera rings) கொண்டுள்ளது.
இருப்பினும் அவற்றில் இரண்டில் மட்டுமே உண்மையான சென்சார்களை கொண்டுள்ளது: ஒன்று 50 மெகாபிக்சல் ப்ரைமரி ஷூட்டர்; இன்னொன்று 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார். மூன்றாவது ரிங் - வெறுமனே ஒரு அலங்காரமாக தெரிகிறது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்
ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கேமராக்களை தாண்டி, ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு திடமான மிட்ரேஞ்ச் ஆப்ஷனாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம். மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் (MediaTek Dimensity 6400 Max) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 6 கொண்டு இயங்கலாம்., மேலும் ரியல்மி 15டி மாடல் ஆனது ரியல்மி 15 மற்றும் ரியல்மி 15 ப்ரோ மாடல்களை போலவே 7000mAh பேட்டரி திறன் மற்றும் 80W சார்ஜிங்கையும் கொண்டிருக்கலாம். இப்போதைக்கு "விரைவில் வரும்" என்றுதான் கூறமுடியும்; வெளியீடு தொடர்பான சரியான தேதி, டைம்லைன் எதுவும் இல்லை
முன்னதாக அறிமுகமான ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ அம்சத்தையும், ஏஐ ஆதரவுடன் கூடிய இமேஜிங் டூல்களையும் ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








