Realme ராசா அதுக்குள்ள 4வது Phone-ஆ.. 9000mAh பேட்டரி, 165Hz OLED டிஸ்பிளே, IP69 உடன் புது மாடல்!
அதுக்குள்ள அடுத்த மாடலின் அறிமுகமா? என்று ஷாக் ஆகும்படியாக, ரியல்மி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் குறித்த புது அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த ஏப்ரலில் ரியல்மி 16 5ஜி (Realme 16) ஸ்மார்ட்போனும், ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையாகி கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பாக ரியல்மி சி100எக்ஸ் (Realme C100X) ஸ்மார்ட்போன் குறித்த பாட்டே கிடைத்தது. இது கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படலாம் என்றும், அந்த சந்தைகளில் இந்தியாவும் இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்திருந்தது. தற்போது நான்காவதாக இன்னொரு ரியல்மி ஸ்மார்ட்போனை குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

எந்த மாடல்? ரியல்மி நிறுவனம் ஆனது மிட்-ரேன்ஜ் விலையில், அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரி ஆகியவற்றின் கலவையுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்தியாவில் இது பி சீரிஸ் அல்லது நார்சோ சீரீஸின் கீழ் அறிமுகப்படுத்தப்படலாம் என்று டிப்ஸ்டர் தேபயன் ராய் கூறுகிறார் (இப்போதைக்கு சரியான மாடல் பெயர் குறித்த விவரங்கள் இல்லை)
என்னென்ன அம்சங்கள்? லீக் ஆன அம்சங்களை பொறுத்தவரை இது 165Hz பிளாட் ஆன OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 அல்லது டைமென்சிட்டி 7400 சிப்செட், 50MP பிரைமரி கேமரா, சுமார் 9000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்
என்ன விலை? முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் இது ஒரு நடுத்தர விலை ஸ்மார்போன் ஆக இருக்கும். அதாவது இது - ரியல்மியின் பி சீரீஸ் மற்றும் நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் "வழக்கமாக இருக்கும்" ரூ.20,000 - ரூ.30,000 விலை பிரிவின் கீழ் இது அறிமுகம் செய்யப்படலாம்.
டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றின் கலவையே இந்த போன் உண்மையில் எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்பதை தீர்மானிக்கும். மேலோட்டமாகவே - இது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்படலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் பாரஸ் குக்லானி (@passionategeekz) அளித்துள்ள விவரங்களின்படி - டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஒரு பிளாட் ஆன டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படலாம், அதில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிசைன் இடம்பெறலாம் - இது செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கான முன்பக்க கேமராபிற்கான இடமாக இருக்கும். பெரும்பாலும் இது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில், டூயல் கேமரா செட்டப் இடம்பெறலாம், இது பில் ஷேப்டு ரியர் கேமரா யூனிட்டில் வைக்கப்படலாம். பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கலாம், அதே நேரத்தில் இடது பக்கம் காலியாக விடப்பட்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியுடன் வரும் மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும்.
ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரலாம்? இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் வருகையை ரியல்மி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications