விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme நார்சோ 50ஐ பிரைம்: அசத்தலான அம்சங்கள்.!

|

கடந்த ஜூன் மாதம் உலக சந்தைகளில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அமேசான்

அமேசான்

அதேபோல் புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமானால் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

நிறங்கள்

நிறங்கள்

டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் நிறங்களில் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமாவியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதள ஆதரவுடன் அறிமுகமாகும்.

கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவு உள்ளது.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சிங்கிள் ரியர் கேமரா

சிங்கிள் ரியர் கேமரா

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலானரியல்மி போன்.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

 பேட்டரி எப்படி?

பேட்டரி எப்படி?

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ரியல்மி போன்.

உங்கள் விண்டோஸ் பிசி-யில் உங்கள் விண்டோஸ் பிசி-யில் "மறைந்து இருக்கும்" வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த போனின் எடை 182 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.7500-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50i Prime Smartphone Launching Soon in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X