9 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்.. 50MP சோனி கேமரா.. அறிமுகமானது புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் சொன்னபடி இன்று தனது புதிய ரியல்மி ஜிடி 5 (realme GT5) ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்த ரியல்மி மாடலில் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி உள்ளது. பின்பு 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5240mAh பேட்டரி கொண்ட வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 240 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மாடலை வாங்கும் பயனர்கள் 9 நிமிடங்களில் பேட்டரியை முழு சார்ஜ் அதாவது 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மாடலை வாங்கும் பயனர்கள் 7 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் சூப்பர்வூக் எஸ் பவர் மேனேஜ்மென்ட் சிப் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 போன். எனவே பாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சிப் சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.
6.74 இன்ச் ஒஎல்இடி(OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ளோயிங் சில்வர் மிரர் (Flowing Silver Mirror) மற்றும் ஸ்டார் மிஸ்ட் ஒயாசிஸ் (Star Mist Oasis)நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்போன். மேலும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
ஆனால் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். 12ஜி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இதன் ரியர் கேமராவின் வலது புறத்தில் பாக்ஸ் எல்இடி ஸ்ட்ரிப் லைட்டினிங் கொடுக்கப்பட்டுள்ளது. இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி (150W ஃபாஸ்ட் சார்ஜிங்) கொண்ட ரியல்மி ஜிடி 5 போனின் விலை 2999 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.34,430). பின்பு இதன் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி (150W ஃபாஸ்ட் சார்ஜிங்) கொண்ட வேரியண்டின் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,375) கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி (240W ஃபாஸ்ட் சார்ஜிங்) கொண்ட ரியல்மி ஜிடி 5 மாடலின் விலை 3799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,375). இந்த போன் சீனாவில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








