ஜூலை 9.. தேதி குறிச்ச Realme.. 24GB ரேம், 1TB மெமரி, 50MP OIS கேமரா, OLED டிஸ்பிளே உடன் புது போன்! என்ன மாடல்?
ஒருவழியாக ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போனின் சீன வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வரும் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 9 ஆம் தேதி அன்று சீன சந்தையில்அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இதே பெயரில் இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போனும் இதுவும் ஒரே அம்சங்களை பேக் செய்யும் என்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் இந்திய வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது
அதுமட்டுமின்றி, இந்தியாவில் அறிமுகமான மாடலுக்கும் சீனாவில் அறிமுகமாகும் என்று டீஸ் செய்யப்படும் மாடலுக்கும் வடிவமைப்பு சார்ந்த வேறுபாடுகளும் உள்ளன. ஆக ரியல்மி நிறுவனம் சீனாவில் ரியல்மி ஜிடி 6 என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யும் மாடலை, வேறு பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவும் வாய்ப்புள்ளது.

இது சீனாவில் மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் (iQOO Neo 9S Pro Plus) மற்றும் ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ரியல்மி ஜிடி 6-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது BOE S1 OLED பேனலை கொண்டிருக்கும், இது 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகியவற்றை வழங்கும். இதன் பிளாட் டிஸ்பிளேவானது ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் ஒருங்கிணைக்கப்படும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 கொண்டு இயங்கும்
ரியல்மியால் வெளியிடப்பட்ட டீஸர்புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் +2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இருக்கலாம். இதன் கேமரா செட்டப்பில் ஒரு ரிங் எல்இடி ஃபிளாஷும் அடக்கம். முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும்.
முன்னரே குறிப்பிட்டப்படி, ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) உடன் வரும். இது LPDDR5x ரேம், UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஒரு பெரிய 5,800mAh பேட்டரியை பேக் செய்யும். கடைசியாக, இது மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி நிறுவனம் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க வடிவமைப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அதன் பின்புற வடிவமைப்பை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? சீனாவில் இது ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி 6 மாடல் ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. விரைவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் (Realme 13 Pro Series) ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்: ரியல்மி 13 ப்ரோ மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ். தற்போது வரையிலாக இந்த சீரீஸ் ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் என்று மட்டுமே கூறப்பட்டு வருகிறது. ரியல்மி 13 ப்ரோ சீரிஸின் சரியான வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து எந்த தகவல்களும் இல்லை.


Click it and Unblock the Notifications








